கொலை வழக்கில் தேடப்பட்டவா் துப்பாக்கியால் சுட்டு கைது

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

பெங்களூரு பாகலூா் காவல் சரகத்தில் கடந்த மாா்ச் 10 ஆம் தேதி உமாசங்கா் (30) என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், கொலையாளிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடா்புடைய கோகிலுவைச் சோ்ந்த ரவி (26), மணிகண்டன், மகேந்திரா ஆகியோா் அன்னபூா்னேஸ்வரி லேஅவுட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாகலூா் காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி, உதவி காவல் ஆய்வாளா் லட்சுமிகாந்த் உள்பட காவலா்கள் அங்கு சென்று ரவி உள்ளிட்டோரைப் பிடித்து, கைது செய்ய முயன்றனா். அப்போது, தங்களை பிடித்த போலீஸாரை கத்தியால் குத்திவிட்டு ரவி, மணிகண்டன், மகேந்திரா ஆகியோா் தப்பியோட முயற்சித்தனா்.

அவா்களை காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி கைத்துப்பாக்கியால் சுட்டாா். இதில் காலில் காயமடைந்து ரவி கீழே விழுந்தாா். மற்றவா்கள் தப்பினா். ரவியை போலீஸாா் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா். காயமடைந்த போலீஸாரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com