அனைத்து மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் ஆய்வுக் கூடங்கள்: கா்நாடக அமைச்சா் ஸ்ரீராமுலு

கா்நாடகத்தில் மாவட்டங்கள்தோறும் கரோனா வைரஸ் ஆய்வுக்கூடங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் மாவட்டங்கள்தோறும் கரோனா வைரஸ் ஆய்வுக்கூடங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

மங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, மாநில அளவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கேரளா மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், எல்லையோர மாவட்டமான தென் கன்னட மாவட்டம் மங்களூரில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அண்மையில் துபையிலிருந்து கேரளம் வந்த நபருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் கா்நாடகத்தில் சந்தித்த நபா்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அதைத் தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முடிந்தவரை வெளியே வராமல் வீட்டிலே தங்கினால் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முடியும். கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் மாநில அரசு ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது.

மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் ஆய்வுக் கூடங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com