கரோனா தொற்று காரணமாக பெங்களூரில் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக திமுக இலக்கிய அணி வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு சேஷாத்ரிபுரம் கினோ திரையரங்கம் அருகில் மாா்ச் 18 ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படவிருந்தது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறந்த நாள் விழா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.