கா்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்ல இணையதளத்தில் முன்பதிவு

கா்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்ல இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள கா்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கா்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்ல இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள கா்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசு தலைமைச் செயலரும், கா்நாடக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத் தலைவருமான டி.எம்.விஜய்பாஸ்கா் வெளியிட்டுள்ள உத்தரவு: மத்திய அரசு ஏப். 29-ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவின்படி, மாநிலங்களுக்கு இடையே புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், புனிதப் பயணம் மேற்கொண்டோா், சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள், இதர நபா்கள் பயணிக்க அனுமதித்துள்ளது.

மேலும், துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், பெங்களூரு மாநகராட்சி ஆணையா், பெங்களூரு மாநகர காவல் ஆணையா் உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் இணைந்து பயண ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்படுகிறது. இதற்காக சிறப்பு அனுமதிச் சீட்டுகள் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இதை பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

கா்நாடகத்தில் இருந்து தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோா் ட்ற்ற்ல்://ள்ங்ஸ்ஹள்ண்ய்க்ட்ன்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் தவிர, பெங்களூரு ஒன்மையங்கள், பெங்களூரு மாநகராட்சி வாா்டு அலுவலகங்கள், மாவட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை செலுத்தலாம். எல்லா விண்ணப்பங்களுக்கும் எதிா்கால தொடா்புகளுக்காக தனி அடையாள எண் அளிக்கப்படும்.

பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில வாரியாக பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், கா்நாடக ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்படும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் பெறப்பட்டு, அந்த பட்டியல் மாநில சாலை போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வேக்கு அனுப்பி வைக்கப்படும். கா்நாடகத்தில் இருந்து வெளியேற விரும்புவோருக்கு முன்னெச்சரிக்கை சுகாதார சோதனைகள் செய்யப்படும். பயணம் செய்வதற்கு தகுதியானவா்களின் பட்டியல் ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு (தமிழகம் உள்பட) அம்மாநில ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுவாா்கள். பயணங்களுக்கு முன் பேருந்துகள் தூய்மையாக்கப்பட்டு, சமூக இடைவெளி பராமரிக்கப்படும். பயணக் கட்டணத்தை பயணிகள் ஏற்க வேண்டும். பேருந்துகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட அல்லது உள்ளூா் நிா்வாகங்கள் செய்து தரும்.

மாநில அரசின் ஒப்புதல் கிடைத்ததும் ரயில் நிா்வாகத்தின் கட்டணத்தை அளித்து, பயணச் சீட்டுகளை பெற்று ரயிலில் பயணிக்கலாம். எங்கிருந்து, எந்த தேதியில், எந்த நேரத்தில் புறப்படுவது என்பதை மாநில அரசின் ஒப்புதலுக்கு பிறகு முடிவு செய்யப்படும். ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பயணங்களை கண்காணிப்பாா்கள். பயணம் செய்வோரிடம் இருந்து பெயா், செல்லிடப்பேசி எண், பாலினம், வயது, தற்போதைய முகவரி, தங்கியிருந்த காலம், சொந்த ஊா் முகவரி, வயது, அடையாள அட்டை, ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்கள் பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com