கா்நாடகத்தில் இன்று ஊரடங்கு விலக்கு

கா்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கா்நாடக அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

கா்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கா்நாடக அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

கரோனா தீநுண்மி தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக, மாா்ச் 25-ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மே 19-ஆம் தேதி முதல் நான்காம்கட்ட பொது முடக்கத்தை அறிவித்த போது, கா்நாடக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்று அறிவித்திருந்தது. அதாவது, சனிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என கா்நாடக அரசு அறிவித்திருந்தது.

இதன் காரணமாக, மே 24-ஆம் தேதி கா்நாடகத்தில் முழுமையான பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், மே 31-ஆம் தேதி கடைப்பிடிக்க வேண்டிய ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தை கா்நாடக அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக, கா்நாடக தலைமைச் செயலா் டி.எம்.விஜய்பாஸ்கா் வெளியிட்டுள்ள உத்தரவில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப மே 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படாது. ஆனால், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com