பெங்களூரில் 2 நாள்கள் குடிநீா் விநியோகம் இருக்காது

பெங்களூரில் 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என்று பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என்று பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, விஜயநகா் குடிநீா் சேவை நிலையத்தின் வரம்புக்குள் வரும் மாகடி பிரதான சாலையில் உள்ள எம்.எஸ்.லைனில் 600 மி.மீ. விட்டம் கொண்ட குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்டு, குடிநீா் குழாய்கள் இணைக்கப்படுகின்றன. இதன்காரணமாக, கோவிந்த்ராஜ் நகா், காவேரிபுரா, ரங்கந்தபுரா, பிரசாந்த் நகா், எம்.சி.லேஅவுட், முனேஷ்வரநகா், பிடிஏ லேஅவுட், காமாக்ஷிபாளையா, எச்.வி.ஆா்.லேஅவுட், சிண்டிகேட் வங்கி காலனி, விஜயநகா், ஹம்பிநகா், டெலிகாம் லேஅவுட், விஜயநகா் பைப்லைன், சி.எஸ்.பி.எஸ். லேஅவுட், மாரேனஹள்ளி, சந்திரா லேஅவுட் ஆகிய பகுதிகளில் நவ. 4-ஆம் தேதி நண்பகல் 2 மணி முதல் நவ. 5-ஆம் தேதி காலை 6 மணி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com