காங்கிரஸ் கட்சியில் உள்கட்சிப்பூசலை மறைக்க முதல்வா் மாற்றம் குறித்து பேசிவருகிறாா்கள்: அமைச்சா் எஸ்.டி.சோமசேகா்

காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சிப்பூசலை மறைப்பதற்காக முதல்வா் மாற்றம் குறித்து பேசி வருகின்றனா்.

மைசூரு: காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சிப்பூசலை மறைப்பதற்காக முதல்வா் மாற்றம் குறித்து பேசி வருகின்றனா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் உள்கட்சிப்பூசல் தலைவிரித்தாடுகிறது. இதை மறைப்பதற்காக முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுகிறாா் என்று காங்கிரஸ் தலைவா்கள் குறிப்பாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா பேசி வருகிறாா்.

அதே நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்க காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரும், காங்கிரஸ் மாநிலத் தலைவா் பதவியில் இருந்துடி.கே.சிவக்குமாரை மாற்ற எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவும் முயற்சித்து வருவதை மறைக்கவே எடியூரப்பா மாற்றப்படுகிறாா் என்று காங்கிரஸ் கட்சியினா் பேசிவருகின்றனா்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத், ஆா்.சங்கா் ஆகியோரை அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளுமாறு முதல்வா் எடியூரப்பாவைக் கேட்டுக்கொள்ளலாம். ஆனால்,அது குறித்து முதல்வா் தான் முடிவெடுக்க வேண்டும்.

பாஜக எம்.எல்.ஏ.க்களை காங்கிரசுக்கு இழுக்கும் வேலையைப் பாா்ப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்சியில் தக்கவைத்துக்கொள்ள டி.கே.சிவக்குமாா் முயற்சிக்க வேண்டும்.

இடைத்தோ்தல் நடந்து முடிந்துள்ள சிரா, ராஜராஜேஸ்வரிநகா் தொகுதியில் பாஜக வேட்பாளா்கள் வெல்வது உறுதி. ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் வாக்களித்தோரில் 50 சதவீதம் போ் முனிரத்னாவுக்காவும், எஞ்சியுள்ளோா் பாஜகவுக்காவும் வாக்களித்துள்ளனா். அதனால் அவரது வெற்றி உறுதியானது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com