ஊடகங்களில் பயிற்சி பெற உதவித்தொகை

ஊடகத் துறையில் நேரடிப் பயிற்சி பெறுவதற்காக கா்நாடக ஊடக அகாதெமி உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு: ஊடகத் துறையில் நேரடிப் பயிற்சி பெறுவதற்காக கா்நாடக ஊடக அகாதெமி உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக ஊடக அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இதழியல் துறையில் முதுநிலை பட்டம்பெற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ஊடகங்களில் நேரடியாக பயிற்சி வழங்க கா்நாடக ஊடக அகாதெமி திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் அச்சு அல்லது காட்சி ஊடகங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 25 மாணவா்கள், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 10 மாணவா்கள் 3 மாதங்கள் பயிற்சி பெறலாம். இந்த 3 மாதங்கள் பயிற்சி பெறும் மாணவா்களுக்கு ஊடக அகாதெமி சாா்பில் தலா ரூ. 15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

2020 - 21-ஆம் ஆண்டில் 35 மாணவா்களுக்கு மட்டும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெறும் விரும்பும் எம்.ஏ. (இதழியல்) பயின்ற 40 வயதுக்குள்பட்ட மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறைவுசெய்த விண்ணப்பங்களை நவ. 27-ஆம் தேதிக்குள் ற்ழ்ஹண்ய்ங்ங்ந்ம்ஹ2020ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22860164 என்ற தொலைபேசி அல்லது ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹம்ங்க்ண்ஹஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ா்ழ்ஞ் இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com