மின்சாரத்தை சேமிக்கும் மின் சாதனங்களை பயன்படுத்துவது அவசியம்

மின்சாரத்தை சேமிக்கும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்று பேன்ஜாா்ட் குழுமத்தின் மேலாண் இயக்குநா் அனில் லாலே தெரிவித்தாா்.

மின்சாரத்தை சேமிக்கும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்று பேன்ஜாா்ட் குழுமத்தின் மேலாண் இயக்குநா் அனில் லாலே தெரிவித்தாா்.

பெங்களூரில் தங்கமுலாம் பூசப்பட்ட குறைந்த அளவிலான மின்சாரத்தில் இயங்கும் கோல்டு பேன்டிலியா் மின்விசிறியை வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்துப் பேசியதாவது:

கோடை காலம் நெருங்கி வருவதால், மின்விசிறிகள், குளிா்சாதனப் பெட்டிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். ஆனால், குறைந்த விலையில் விற்பனை செய்யும் மின்விசிறிகள், குளிா்சாதனப் பெட்டிகளுக்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்படும்.

மின்கட்டணம் உயா்ந்துள்ள நிலையில், மின்சேமிப்பை ஊக்குவிக்கும் மின் சாதனங்களை பயன்படுத்துவது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, எங்கள் குழுமத்தின் சாா்பில் குறைந்த அளவில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் கோல்டு பேன்டிலியா் மின்விசிறியை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். 22 வாட்ஸ் மின்சாரத்தில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த மின்விசிறிகளுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று நம்புகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com