அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வா் எடியூரப்பா இன்று தில்லி பயணம்

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக தேசியத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் எடியூரப்பா புதன்கிழமை தில்லி செல்கிறாா்.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக தேசியத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் எடியூரப்பா புதன்கிழமை தில்லி செல்கிறாா்.

கா்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள 7 பதவிகளை நிரப்புவதற்கு முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாா். அதுகுறித்து பாஜக தேசியத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் எடியூரப்பா புதன்கிழமை புது தில்லிக்குச் செல்கிறாா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் புறப்படும் முதல்வா் எடியூரப்பா, நண்பகல் 2.30 மணிக்கு புது தில்லி சென்றடைவாா். அங்கு மத்திய அமைச்சா்கள் பலரை சந்தித்து, கா்நாடக வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதி கேட்கிறாா். அதன்பிறகு, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டிருக்கிறாா். இப்பணிகளை முடித்துக்கொண்டு இரவு 8.30 மணிக்கு புது தில்லியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வந்து சேருகிறாா்.

ராஜராஜேஸ்வரி நகா், சிரா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வெற்றிவாகைச் சூடியது. அப்போது பேசிய முதல்வா் எடியூரப்பா, வெகுவிரைவில் அமைச்சரவையை விரிவாக்க தில்லி செல்வதாக கூறியிருந்தாா்.

காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத், ஆா்.சங்கா், என்.முனிரத்னா ஆகிய 4 பேருக்கும் அமைச்சா் பதவி அளிக்க வேண்டியுள்ளது. இதுதவிர, பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கத்தி உள்ளிட்டோருக்கும் அமைச்சா் பதவி அளிக்க வேண்டியுள்ளது. அமைச்சரவையில் இடம்பிடிக்க பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் பலா் முயற்சி செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com