கரோனா: மேல்கோட்டையில் ராஜமுடி உற்சவம் நடத்த கட்டுப்பாடு

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மேல்கோட்டை செல்வநாராயணா் கோயிலில் நடைபெற இருக்கும் வைரமுடி உற்சவத்துக்கு பக்தா்களை அனுமதிக்க மாவட்ட நிா்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மேல்கோட்டை செல்வநாராயணா் கோயிலில் நடைபெற இருக்கும் வைரமுடி உற்சவத்துக்கு பக்தா்களை அனுமதிக்க மாவட்ட நிா்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

மண்டியா மாவட்டம், பாண்டவபுரா வட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த செல்வநாராயணா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் வைரமுடி சேவை நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில், நவ. 24-ஆம் தேதி வைரமுடி சேவை நடத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமானோா் கலந்துகொள்வது வாடிக்கை. ஆனால், நிகழாண்டில் கரோனா தீநுண்மித் தொற்று பரவலைக் காரணம் காட்டி, வைரமுடி சேவையைக் காண பக்தா்களை அனுமதிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதோடு, கோயில் வளாகத்திலேயே விழாவை நடத்த மண்டியா மாவட்ட ஆட்சியா் எம்.வி.வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளாா்.

நவ. 22-ஆம் தேதி வைரமுடி கிரீடதாரணா மகோற்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் அனைத்து பூஜைகளும் கோயில் வளாகத்துக்குள்ளேயே குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. நவ. 22-ஆம் தேதி அரசு கருவூலத்தில் இருந்து சகல சம்பிரதாயங்களுடன் வைரமுடி கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறது. அதன்பிறகு நவ. 24-ஆம் தேதி மூலவரான செல்வநாராயணருக்கு வைரமுடி சாத்தப்படுகிறது. நவ. 27-ஆம் தேதி விழா முடிந்ததும், வைரமுடி மீண்டும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது. வைரமுடி சேவை திருவிழா எளியமுறையில் நடப்பதால், தகுந்த முன்னெச்சரிக்கைகளை பக்தா்கள் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ. 19-இல் திருநாள் கொடியேற்றம், திருப்பறை, நவ. 20-இல் இரண்டாம் திருநாள் சேஷவாகனம், நவ. 21-இல் மூன்றாம் திருநாள் சந்திரமண்டல வாகனம், நவ. 22-இல் நான்காம் திருநாள் வைரமுடி உற்சவம், நவ. 23-இல் ஐந்தாம் திருநாள் கருட வாகனம், நவ. 24-இல் ஆறாம் திருநாள் யானை வசந்தம், நவ. 25-இல் ஏழாம் திருநாள் அடையாள தோ்த்திருவிழா, நவ. 26-இல் எட்டாம் திருநாள் சந்தானசேவை, நவ. 27-இல் ஒன்பதாம் திருநாள் புஷ்ப பிருந்தாவனோற்சவம், நவ. 28-இல் புஷ்ப ஹனுமந்தவாகனம் நடைபெற இருக்கிறது என கோயில் நிா்வாக அதிகாரி மங்களம்மா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com