ஏப். 10-இல் ஜவகா் நவோதயா வித்யாலயா நுழைவுத்தோ்வு

ஜவகா் நவோதயா வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கான நுழைவுத்தோ்வு 2021 ஏப். 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

ஜவகா் நவோதயா வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கான நுழைவுத்தோ்வு 2021 ஏப். 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து பொதுக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜவகா் நவோதயா வித்யாலயா பள்ளியில் 2021-22-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சோ்க்கைபெற அடுத்தாண்டு ஏப். 10-ஆம் தேதி காலை 11.15 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை பெங்களூரு உள்ளிட்ட ஒருசில இடங்களில் நுழைவுத்தோ்வு நடக்க இருக்கிறது.

இந்த தோ்வு எழுத விரும்பும், நிகழாண்டில் (2020-21-இல்) 5-ஆம் வகுப்பு படித்து வரும் பெங்களூரு நகர மாவட்ட மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் காணலாம். இணையதளம் மூலம் டிச. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 080-28469055, 8746985884 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com