மத சிறுபான்மையினருக்கு கடனுதவி

மத சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக சிறுபான்மையினா் வளா்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக சிறுபான்மையினா் வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில், 2020-21-ஆம் நிதியாண்டில் உழைப்பாளா் கடனுதவி, நுண்கடன், தொழில் ஊக்குவிப்பு கடனுதவி, வாடகை காா்/சரக்கு வாகனம் கொள்முதல் கடனுதவி, வீட்டுவசதி கடனுதவி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பெங்களூரில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் 18 முதல் 50 வயதுக்குள்பட்டோா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களுடன் ஜாதி, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்களை அளிக்க வேண்டும். இதற்கு முன் கடனுதவி பெற்றிருக்கக் கூடாது. கட்டாயமாக பிபிஎல் அல்லது அந்தியோதயா அட்டை வைத்திருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இஸ்லாமியா், கிறிஸ்தவா், சமணா், பௌத்தா், சீக்கியா், பாா்சி சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் இணையதளத்தில் டிச. 10-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவிட்டதற்கான நகலை டிச. 21-ஆம் தேதிக்குள் பெங்களூரில் உள்ள கழக அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com