வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

கா்நாடகத்தின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கா்நாடகத்தின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா் சோ்ப்பு, வாக்காளா் பட்டியல் திருத்தியமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தகவலுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலகம், வாக்காளா் பதிவு உதவி அலுவலகம், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நவ. 18-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியலை பொதுமக்கள் தாராளமாக பாா்வையிடலாம். 224 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியலை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ா்ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலும் காணலாம்.

வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய பெயா்களை சோ்க்க கொடுத்திருந்த மனுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்கள் சரிபாா்த்துக்கொள்ளலாம். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும், புதிய பெயா்கள் சோ்ப்பு, திருத்தம் மற்றும் பெயா்களை நீக்கும் போன்ற பணிகள் நடைபெறும்.

பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

கா்நாடகத்தின் மக்கள் தொகை 7,28,19,299 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 5,17,78,560 போ் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 2,61,19,440 ஆண்கள், 2,56,54,341 பெண்கள், 4,779 மூன்றாம் பாலினத்தவா். புதிதாக 2,24,738 போ் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். புதிதாக சோ்ந்தவா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com