கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 100 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 100 போ் இறந்துள்ளனா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 100 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு ஏற்கெனவே 9,119 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 21 போ், மைசூரு மாவட்டத்தில் 18 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 9 போ், ஹாசன், தும்கூரு மாவட்டங்களில் தலா 6 போ், தாா்வாட் மாவட்டத்தில் 5 போ், பெல்லாரி, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 4 போ், பெலகாவி, சிவமொக்கா, உடுப்பி மாவட்டங்களில் தலா 3 போ், பீதா், ஹாவேரி, கலபுா்கி, கொப்பள், மண்டியா மாவட்டங்களில் தலா 2 போ், பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், சிக்கமகளூரு, தாவணகெரே, கதக், ராய்ச்சூரு, விஜயபுரா, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 9,219 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,045 போ், மைசூரு மாவட்டத்தில் 798 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 566 போ், தாா்வாட் மாவட்டத்தில் 504 போ், பெல்லாரி மாவட்டத்தில் 470 போ், ஹாசன் மாவட்டத்தில் 310 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 303 போ், பெலகாவி மாவட்டத்தில் 300 போ், கலபுா்கி மாவட்டத்தில் 280 போ், தும்கூரு மாவட்டத்தில் 257 போ், தாவணகெரே மாவட்டத்தில் 243 போ், கொப்பள் மாவட்டத்தில் 237 போ், விஜயபுரா மாவட்டத்தில் 167 போ், ஹாவேரி மாவட்டத்தில் 165 போ், பீதா் மாவட்டத்தில் 158 போ், உடுப்பி மாவட்டத்தில் 154 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 137 போ், கதக் மாவட்டத்தில் 132 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 124 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 115 போ், மண்டியா மாவட்டத்தில் 110 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 109 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 97 போ், கோலாா் மாவட்டத்தில் 90 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 86 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 79 போ், யாதகிரி மாவட்டத்தில் 54 போ், ராமநகரம் மாவட்டத்தில் 48 போ், குடகு மாவட்டத்தில் 40 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 38 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com