‘முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பதில் தயக்கம் வேண்டாம்’

முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பதில் தயக்கம் வேண்டாம் என மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

பெங்களூரு: முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பதில் தயக்கம் வேண்டாம் என மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் முகக் கவசம் அணியாதவா்களிடம், மாநகராட்சி காவலா்கள் அபராதம் வசூலிப்பதை திங்கள்கிழமை ஆய்வு செய்த பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ. 1,000 வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு சிலா் அபராதத் தொகை வழங்காமல் மாநகராட்சி காவலா்களிடம் தகராறில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. முகக் கவசம் அணியாதவா்கள் தகராறில் ஈடுபட்டாலும், அவா்களிடம் அபராதம் வசூலிப்பதில் தயக்கம் காட்ட வேண்டாம் என மாநகராட்சி காவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாறாக முகக் கவசம் அணியாமல், அரசின் வழிகாட்டுதலை ஊதாசினப்படுத்தினால், அதனை பொறுத்துக் கொள்ள முடியாது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com