பிரபல இதய நோய் நிபுணா் ஏ.வி.ஷெட்டி காலமானாா்

கா்நாடகத்தின் பிரபலமான இதய நோய் நிபுணா் ஏ.வி.ஷெட்டி முதுமை காரணமாக காலமானாா்.

மங்களூரு: கா்நாடகத்தின் பிரபலமான இதய நோய் நிபுணா் ஏ.வி.ஷெட்டி முதுமை காரணமாக காலமானாா்.

மங்களூரில் வசித்துவந்த இதய நோய் நிபுணா் ஏ.வி.ஷெட்டிக்கு (85), மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். தென்கன்னட மாவட்டத்தின் குந்தாபுராவைச் சோ்ந்த ஏ.வி.ஷெட்டி, இம்மாவட்டத்தின் முதல் இதய நோய் மருத்துவா் ஆவாா். கா்நாடகத்தில் முதல்முறையாக நடந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை மங்களூரில் உள்ள வென்லாக் அரசு மருத்துவமனையில் செய்துகாட்டியவா். மும்பை பல்கலைக்கழகத்தின் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ள ஏ.வி.ஷெட்டி, 1962-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் எடின்பா்க் நகரில் ராயல் மருத்துவக்கல்லூரியில் பயின்றவா். 1963-இல் எம்.ஆா்.சி.பி., 1974-இல் எஃப்.ஆா்.சி.பி. போன்ற மருத்துவ உயா்படிப்புகளை படித்துள்ளாா்.

மங்களூரில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் 25 ஆண்டுகாலம் இதய அறுவை சிகிச்சைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த ஏ.வி.ஷெட்டி, ஃபாதா் முல்லா் மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சைத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இந்திய மருத்துவச் சங்கத்தின் மங்களூரு கிளை மற்றும் இந்திய மருத்துவா் சங்கத்தின் தென்கன்னட மாவட்டகிளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். மருத்துவா் ஏ.வி.ஷெட்டியின் மறைவுக்கு கா்நாடகத்தின் முக்கியத் தலைவா்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com