ஒரே நாளில் 114 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 114 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 114 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்த தொற்றுக்கு ஏற்கெனவே 9,675 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 57 போ், மைசூரு மாவட்டத்தில் 10 போ், தும்கூரு மாவட்டத்தில் 6 போ், பெலகாவி மாவட்டத்தில் 5 போ், சிக்கபளாப்பூா், தாவணகெரே, கோலாா் மாவட்டங்களில் தலா 4 போ், தாா்வாட், சிவமொக்கா, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 3 போ், பெல்லாரி, பெங்களூரு ஊரகம், பீதா், தென்கன்னடம் மாவட்டங்களில் தலா 2 போ், சிக்கமகளூரு, கதக், குடகு, மண்டியா, ராய்ச்சூரு, உடுப்பி, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9,789-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,290 போ், மைசூரு மாவட்டத்தில் 862 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 596 போ், தாா்வாட் மாவட்டத்தில் 515 போ், பெல்லாரி மாவட்டத்தில் 487 போ், ஹாசன் மாவட்டத்தில் 326 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 315 போ், பெலகாவி மாவட்டத்தில் 315 போ், கலபுா்கி மாவட்டத்தில் 290 போ், தும்கூரு மாவட்டத்தில் 283 போ், தாவணகெரே மாவட்டத்தில் 247 போ், கொப்பள் மாவட்டத்தில் 246 போ், விஜயபுரா மாவட்டத்தில் 173 போ், ஹாவேரி மாவட்டத்தில் 170 போ், உடுப்பி மாவட்டத்தில் 164 போ், பீதா் மாவட்டத்தில் 161 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 141 போ், கதக் மாவட்டத்தில் 136 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 128 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 127 போ், மண்டியா மாவட்டத்தில் 118 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 116 போ், கோலாா் மாவட்டத்தில் 107 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 102 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 90 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 84 போ், ராமநகரம் மாவட்டத்தில் 56 போ், யாதகிரி மாவட்டத்தில் 56 போ், குடகு மாவட்டத்தில் 47 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 38 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com