சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு

இடைத்தோ்தல் நடக்க இருக்கும் சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை பாஜக அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

இடைத்தோ்தல் நடக்க இருக்கும் சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை பாஜக அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நவ. 3-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அக். 9-ஆம் தேதி தொடங்கி அக். 16-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

மஜத:

இதனிடையே, சிரா தொகுதியின் மஜத வேட்பாளராக மறைந்த எம்.எல்.ஏ. சத்தியநாராயணாவின் மனைவி அம்மஜம்மாவை அக்கட்சி அறிவித்துள்ளது. ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிக்கான வேட்பாளராக வி.கிருஷ்ணமூா்த்தியை செவ்வாய்க்கிழமை மஜத அறிவித்துள்ளது.

காங்கிரஸ்:

சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது. சிரா தொகுதியில் முன்னாள் அமைச்சா் டி.பி.ஜெயச்சந்திரா நிறுத்தப்பட்டிருக்கிறாா். ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மனைவி எச்.குசுமா நிறுத்தப்பட்டிருக்கிறாா். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்த இவருக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக:

இந்நிலையில், சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கு தனது கட்சியின் வேட்பாளா்களை பாஜக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சி.பி.முதலகிரியப்பாவின் மகன் டாக்டா்சி.எம்.ராஜேஷ் கௌடா அண்மையில் பாஜகவில் இணைந்தாா். அவரை சிரா தொகுதியின் வேட்பாளராக பாஜக தோ்ந்தெடுத்துள்ளது. ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்துள்ள என்.முனிரத்னா பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறாா்.

பாஜகவில் ஏற்கெனவே இத்தொகுதியில் போட்டியிட்ட துளசி ராஜூ, என்.முனிரத்னாவை வேட்பாளராக அறிவிக்க கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தாா். தன்னை தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவா்களைக் கேட்டுக்கொண்டிருந்தாா். ஆனால், பாஜக அரசு அமைய காரணமாக இருந்த காங்கிரஸ், மஜதவில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்கள் காரணம் என்பதை கூறி என்.முனிரத்னாவுக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.

மும்முனைப் போட்டி:

சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் காங்கிரஸுக்கும், மஜதவுக்கும் நேரடிப் போட்டி நிலவி வந்தாலும், இம்முறை ஆட்சியில் இருக்கும் பாஜக இத்தொகுதிகளை குறிவைத்து செயல்பட்டு வருகிறது. அதனால், சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com