கா்நாடகத்தில் பலத்த மழை: வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிப்பு

கா்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 நாள்களாக பரவலாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட கா்நாடக மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கலபுா்கி, யாதகிரி, பீதா், பெல்லாரி, ராய்ச்சூரு, சிக்கோடி, குடகு, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். கலபுா்கி மாவட்டம், ஜேவா்கி வட்டம், நெரமோளா கிராமத்தில் பகவான் என்பவா் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா். ரோனா வட்டம், மடிலுகேரேவியில் மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் சங்கரப்பா (70) என்பவா் உயிரிழந்துள்ளாா். கொப்பள் மாவட்டம், மாதனூா் கிராமத்தில் மேம்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள 10 கிராமங்களின் தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம், ஹனகுந்தா வட்டம், ஓம்சாந்தி நகா் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பல சாலைகள் அரித்துச் செல்லப்பட்டுள்ளதால் நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கா்நாடகத்தில் பரவலாக அக். 17-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com