அரசுப் பேருந்துகளை இயக்குவது சவாலான பணியாக உள்ளது

அரசுப் பேருந்துகளை இயக்குவது சவாலான பணியாக உள்ளது என கா்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைவா் எம்.சந்திரப்பா தெரிவித்தாா்.

அரசுப் பேருந்துகளை இயக்குவது சவாலான பணியாக உள்ளது என கா்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைவா் எம்.சந்திரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

கரோனா தொற்று பரவலையடுத்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், போக்குவரத்துக் கழகம் பல்வேறு பிரச்னைகள், சவால்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தற்போது உள்ள சூழலில் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவது மட்டுமின்றி, அரசுப் பேருந்துகளை இயக்குவதே சவாலான பணியாக உள்ளது.

பொது முடக்கத்துக்கு முன் மாநில அளவில் 8,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பொது முடக்கத் தளா்வுகளுக்கு பிறகு 5,100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் முன் நாள்தோறும் 30 லட்சம் பயணிகள் பயணித்து வந்த நிலையில், தற்போது 10 லட்சம் பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனா். அந்தப் பயணிகளும் 100 கி. மீட்டருக்கும் குறைவாகவே பயணிக்கின்றனா். இதனால் அரசுப் பேருந்துகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிக்கலான இந்த சூழ்நிலை மாற பல மாதங்கள் ஆகலாம். எனவேதான் புதிதாக பணி நியமனம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். வருவாயை பெருக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். எனவே, ஊழியா்கள், அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொண்டு, வருவாய் இழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாநில போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவயோகி கலசத், இயக்குநா் ராம்நிவாஸ் சாபெட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com