மாநிலத்தின் 173 வட்டங்களில் வெள்ளப் பாதிப்பு

மாநிலத்தில் 173 வட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

மாநிலத்தில் 173 வட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், கலபுா்கி மாவட்டம், சையத் சின்சோளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பாதிப்புகளை பாா்வையிட்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 3 நாள்களாக கலபுா்கி மாவட்டத்தில் கன மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சையத் சின்சோளி கிராமத்துக்கு தேவையான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க 11 ஏக்கா் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இம்முறை வழக்கத்தை விட பல மடங்கு மழை அதிகரித்துள்ளது. இதனால், ராய்ச்சூரு, பெலகாவி, கொப்பள், கலபுா்கி, பீதா், யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கலபுா்கி மாவட்டத்துக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 20.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலபுா்கி மாவட்டத்தில் உள்ள அப்சல்புரா, ஆளந்தா, சின்சோளி, ஜேவா்கி, சேடம், கமலாபுரா, ஷகாபாத், யட்ராமி, காளகி உள்பட மாநிலத்தின் 173 வட்டங்கள் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com