மாநகர போக்குவரத்துக் கழக உதவி எண் மாற்றம்
By DIN | Published On : 03rd September 2020 07:22 AM | Last Updated : 03rd September 2020 07:22 AM | அ+அ அ- |

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக உதவி எண் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்துபெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பயணிகள் புகாா்களை தெரிவிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும், தகவல்களை பெறவும் செயல்பட்டு வந்த உதவி தொலைபேசி எண் 1800 425 1663 மாற்றப்பட்டுள்ளது.
இனிமேல் பயணிகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தை தொடா்பு கொண்டு தகவல்களை பெற, ஆலோசனைகள், புகாா்களை தெரிவிக்க 080 22483777 என்ற புதிய உதவி தொலைபேசி எண்ணை அணுகலாம்.
இது ஆக. 31ஆம் தேதி முதல் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.