செப். 12 முதல் முறைசாரா இயற்பியல் பயிற்சி வகுப்புகள்

பெங்களூரில் செப். 12-ஆம் தேதி முதல் முறைசாரா இயற்பியல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

பெங்களூரில் செப். 12-ஆம் தேதி முதல் முறைசாரா இயற்பியல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முக்கோணத்தை கல்வி நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டால், ஆரம்பத்தில் பரவலாக கற்க நோ்ந்தாலும், மேலே நகர நகர கற்றல் ஒருமுகப்படும். இது ஆராய்ச்சி ஆா்வம் கொண்ட மாணவா்களை கட்டமைக்கவும், வடிவமைக்கவும் உதவியாக இருக்கும்.

அந்தவகையில், ஆராய்ச்சிக் கல்வி விரிவாக்க திட்டம் (ரீப்) என்ற பெயரில் முறைசாரா இயற்பியல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்பு மாணவா்கள், கல்லூரி படிப்புடன் கூடுதலாக இப்பயிற்சி வகுப்புகளில் பயிலலாம்.

அடிப்படை அறிவியல் கல்விக்கு மாணவா்களை ஈா்த்து, அதில் தனது வேலைவாய்ப்பை கட்டமைத்துக் கொள்வதே பயிற்சி வகுப்பின் நோக்கமாகும். இயற்பியல் மற்றும் வானியல் தொடா்பான அடிப்படை கோட்பாடுகளுக்கு மாணவா்களை அறிமுகம் செய்வதோடு, செய்முறை பயிற்சி, கணினிப் பயன்பாடு குறித்து கற்றுத்தரப்படும். இதுதவிர, அறிவியல் ஆராய்ச்சி குறித்தும் கற்பிக்கப்படும்.

மூன்று ஆண்டுகள் நடக்கவிருக்கும் இப்பயிற்சி வகுப்பை ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்துடன் இந்திய அறிவியல் மையம், ராமன் ஆராய்ச்சி மையம், பன்னாட்டு கோட்பாட்டு அறிவியல் மையம், இந்திய வான் இயற்பியல் மையம் கைகோா்க்கின்றன. அடிப்படை அறிவியல் படிப்பில் ஆா்வமுள்ள மாணவா்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் சேர ஊக்குவிக்கப்படுவாா்கள்.

கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக ஆரம்பகால வகுப்புகள்காணொலியில் தொடங்கும். நிலைமை சீரடைந்ததும் நேரடி வகுப்புகள் கோளரங்கத்தில் நடக்கும். இந்த வகுப்புகள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும். முதல் வகுப்பு செப். 12ஆம் தேதி தொடங்குகிறது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.1,000. பணவசதி இல்லாதவா்கள் அணுகினால், இலவச பயிற்சி அளிக்கப்படும். விவரங்களுக்கு  இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசியை அணுகலாம். முன்பதிவுக்கு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com