நாளை முதல் கா்நாடகத்தில் இருந்து கோவாவுக்கு பேருந்துகள் இயக்கம்

கா்நாடகத்தில் இருந்து கோவாவுக்கு செப். 7ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

கா்நாடகத்தில் இருந்து கோவாவுக்கு செப். 7ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தீநுண்மித் தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கா்நாடகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், கா்நாடகத்தில் இருந்து கோவா மாநிலத்திற்கு பேருந்து சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, மைசூரு உள்பட கா்நாடகத்தின் பல பகுதிகளில் இருந்து கோவா மாநிலத்திற்கு செப்.7-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளில் பயணிகள் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயமாகும். மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசியை அணுகலாம். இணையவழி - முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு  இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com