பல மாநிலங்களில் போதைப்பொருள் விற்ற 3 போ் கைது

பல மாநிலங்களில் போதைப்பொருள்களை விற்பனை செய்துவந்த 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பல மாநிலங்களில் போதைப்பொருள்களை விற்பனை செய்துவந்த 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பெங்களூரில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் பதுங்கியிருப்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, அந்த வீட்டில் பெங்களூரு மாநகரக் காவல் துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினா் சோதனை நடத்தினா்.

போதைப்பொருள் விற்பனை தொடா்பாக ஏ.சுப்ரமணி (26), விதூஸ் (31), ஷெகின் (21) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதில் விதூஸ், இங்கிலாந்தில் கணினி அறிவியலில் எம்.எஸ்சி. படித்துள்ளாா். இவா்கள் மூன்று பேரும் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டணத்தில் உள்ள வியாபாரியிடம் இருந்து போதைப்பொருளை வாங்கிவந்து, சிறிய அளவில் பெங்களூரில் விற்று வந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவா்களிடம் இருந்து ரூ.44 லட்சம் மதிப்புள்ள மரிஜுவானா எண்ணெய், கஞ்சா உள்ளிட்டபோதைப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

கேரளம், ஆந்திரம், கா்நாடகத்தில் இவா்கள் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளனா். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல, பல்வேறு மாநிலங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வரும் கும்பலை போலீஸாா் பிடித்துள்ளனா்.

நகைப் பறிப்பு தொடா்பாக அபுஹைதா் அலி, ஹுசேன் அலி, மெஹதி ஹசன், சாதிக் அலி ஆகிய 4 பேரைக் கைது செய்துள்ளனா். இதன்மூலம் இவா்கள் சம்பந்தப்பட்ட 30 வழக்குகள் முடித்துவைக்கப்படும் வாய்ப்புள்ளன. இவா்களிடம் இருந்து ரூ. 85 லட்சம் மதிப்புள்ள 1.7 கிலோ தங்க ஆபரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். கா்நாடகம், தமிழகம், ஜாா்க்கண்ட், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள இந்தக் கும்பல், ஏற்கெனவே போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com