போதைப் பொருள் விவகாரத்தில் யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்: அமைச்சா் பசவராஜ் பொம்மை

போதைப் பொருள் விவகாரத்தில் யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம் என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

போதைப் பொருள் விவகாரத்தில் யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம் என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, ஆா்.டி.நகரில் உள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பயன்பாடு விவகாரத்தில் கா்நாடக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப் பொருள் வழக்கில் பல பிரபலங்களுக்குத் தொடா்பிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பிரபலங்கள் வழக்கில் இருந்து விடுபட போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்தாலும் யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம்.

எவ்வித பாகுபாடும் இல்லாமல் விசாரணை நடத்தப்படும். போதைப் பொருள் விற்பனையில் எவ்வளவு பெரிய மனிதா்கள் ஈடுபட்டிருந்தாலும், அவா்களை பகிரங்கப்படுத்துவோம். போதைப் பொருள் வழக்கு விசாரணையில் யாருடைய தலையீடும் இல்லை.

போதைப் பொருள் விற்பனையின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் வீரேன் கன்னாவை கா்நாடக போலீஸாா் புது தில்லியில் கைதுசெய்துள்ளனா். அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். போதைப் பொருள் மோசடியின் பின்னணியில் இருப்பவா்கள் யாா், விநியோகம் செய்வது யாா், விற்பனையில் ஈடுபட்டிருப்போா் யாா், பயன்படுத்துவோா் யாா் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எல்லை மாவட்டங்களில் இருந்து கா்நாடகத்துக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரமாக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னா் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக சட்டப்பேரவை துணைத் தலைவா் யோகேஷ் பட் தலைமையிலான குழு அளித்த அறிக்கை குறித்து தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து முடிவெடுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com