இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 08th September 2020 10:34 PM | Last Updated : 08th September 2020 10:34 PM | அ+அ அ- |

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) பெங்களூரு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம், 2020-ஆம் கல்வியாண்டில் புதிய முதுநிலை, இளநிலை பட்டப் படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம், சான்றிதழ் படிப்புகளை வழங்க இருக்கிறது. தொலைநிலைக் கல்வி திட்டத்தில் அளிக்கப்படும் இப்படிப்புகளில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க செப். 15-ஆம் தேதி கடைசி நாளாகும். கலபுா்கியில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஞானகங்கா வளாகத்தில் இக்னோவின் கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளில் சோ்க்கை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9845737713, 9880801017 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் அல்லது மின்னஞ்சலை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.