கே.எஸ்.ஆா். பெங்களூரு-மங்களூரு சிறப்பு ரயில் புறப்படும் நேரம் அறிவிப்பு
By DIN | Published On : 11th September 2020 05:23 AM | Last Updated : 11th September 2020 05:23 AM | அ+அ அ- |

கே.எஸ்.ஆா். பெங்களூரு-மங்களூரு சிறப்பு ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு கே.எஸ்.ஆா். ரயில் நிலையத்திலிருந்து மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லும் சிறப்பு ரயில் (06515), செப். 11-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆா். ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தை காலை 8.25 மணியளவில் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செப். 13-ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06516), பெங்களூரு கே.எஸ்.ஆா். ரயில் நிலையத்தை அதிகாலை 4.15 மணியளவில் வந்தடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.