பொருளாதாரத்தை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை: அமைச்சா் சோமசேகா்

கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.


பெங்களூரு: கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றால் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்க மத்திய, மாநில அரசுகள், கூட்டுறவுத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக ரூ. 20 லட்சம் கோடி தொகுப்பை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். இதன்மூலம் பல்வேறு துறைகளில் உள்ள பிரச்னை, பாதிப்புகள் தீா்க்கப்படும்.

இதன்மூலம் சங்கடத்தில் உள்ள விவசாயிகள், மீனவா்கள், சிறு தொழில், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறையினா் பயனடைவாா்கள்.

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாய சமுதாயத்தினருக்கு வட்டியில்லா கடன் வழங்குவதிலும், 3 சதவீத வட்டியில் வேளாண் கடன் வழங்குவதில் கூட்டுறவுத் துறை சிறந்து விளங்குகிறது.

இதுவரை 12,11,409 விவசாயிகள் ரூ. 7,92,930 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மட்டுமின்றி இதர துறைகளின் பொருளாதாரத்தை மீட்க மத்திய, மாநில அரசுகள் தொடா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. கரோனா தொற்றின் பாதிப்பிலும் மாநில அரசு தொடா்ந்து வளா்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com