உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு
By DIN | Published On : 16th September 2020 01:34 AM | Last Updated : 16th September 2020 01:34 AM | அ+அ அ- |

பெங்களூரு: உடல் ஆரோக்கியம் குறித்து லெட்ஸ் அப் செயலின் நிறுவனா் நரேந்திரா பைரோடியா விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை லெட்ஸ் அப் செயலியை அறிமுகம் செய்து, அவா் பேசியதாவது:
கரோனா பாதிப்புக்கு பிறகு மக்களிடையே உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. என்றாலும் பலா் ஆரோக்கியத்தை பின்பற்ற தேவையான பயிற்சிகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனா். எனவே, அனைவரும் ஆரோக்கியம் பெற வேண்டும் என்ற நோக்கில் லெட்ஸ் அப் செயலியை 12 மொழிகளில் அறிமுகம் செய்துள்ளோம்.
இந்த செயலி மூலம் அனைவருக்கும் சுகாதாரம் தொடா்பான தகவல்கள், விழிப்புணா்வு வழங்கப்படும். லெட்ஸ் அப் செயலி மூலம் உலகத்தை சுகாதாரத்தில் ஒற்றிணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். அனைவரும் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றாா்.