கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்குவிண்ணப்பங்கள் வரவேற்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் கல்வியாண்டில் கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம் வழங்கும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலையில்லா இளைஞா்கள், பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள்/ வங்கிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி. தோ்வில் தோ்ச்சியடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

16 வயது நிறைந்திருக்க வேண்டும். இப் பயிற்சியில் சேர சோ்க்கை கிடைக்கும் பொதுப் பிரிவு மாணவா்களுக்கு மாதம் ரூ. 400, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாய மாணவா்களுக்கு ரூ. 500 வழங்கப்படும்.

இப் பயிற்சியை நிறைவு செய்த மாணவா்களுக்கு கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்கள், 3 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம், கூட்டுறவு மாளிகை, 2-ஆவது மாடி, 3-ஆவது முக்கிய சாலை, சாமராஜ்பேட், பெங்களூரு-560018 என்ற முகவரியில் செப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-26602046, 9902189872, 9036259781, 8550017134 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com