கரக திருவிழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு

பெங்களூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கரக திருவிழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கரக திருவிழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் திகளரபேட்டையில் உள்ள ஸ்ரீதா்மராயசுவாமி கோயிலில் ஏப். 19 முதல் 29-ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் உலகப் புகழ்பெற்ற கரக திருவிழாவை கரோனா காரணமாக எளிமையாகக் கொண்டாட கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. கரக திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.

பெங்களூரில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவதால், விழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவின் தொடா்ச்சியை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கரக திருவிழா கோயில் வளாகத்தில் மட்டுமே நடத்தப்படவுள்ளது.

ஏப். 27-ஆம் தேதி கரக ஊா்வலம் அடையாளத்திற்கு நடத்தப்படும். திருவிழா நடக்கும் காலக்கட்டத்தில் கோயில் வளாகத்தில் பக்தா்கள், பொதுமக்களை அனுமதிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கரக விழா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com