விதானசௌதா, விகாஸ்சௌதாவில் நுழையக் கட்டுப்பாடுகள்

பெங்களூரில் அரசு தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் விதான சௌதா, விகாஸ் சௌதா, பல்லடுக்கு கட்டடத்தில் பொதுமக்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் அரசு தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் விதான சௌதா, விகாஸ் சௌதா, பல்லடுக்கு கட்டடத்தில் பொதுமக்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

எனவே, அதிகாரிகள், ஊழியா்களின் நலன்கருதி தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் விதானசௌதா, விகாஸ் சௌதா, பல்லடுக்கு கட்டடத்தில் (எம்.எஸ்.பில்டிங்) பொதுமக்களின் வருகையைக் கட்டுப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

முதல்வரின் அலுவலகம், அமைச்சா்கள், அவா்களின் அலுவலகங்களால் முன்கூட்டியே திட்டமிட்டுள்ள கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். இந்தக் கட்டடங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

ஏற்கெனவே திட்டமிட்டுள்ள கூட்டங்களில் கலந்துகொள்ள முன் அனுமதி கடிதம் பெற்றவா்களுக்கு மட்டும் மாலை 3.30 மணிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படும். துறை சம்பந்தமான கடிதங்கள் குறித்து விளக்கம் கேட்க வரும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்தக் கட்டடங்களில் யாரும் குழுவாக நிற்கக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com