பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பருவத் தோ்தலுக்கான தற்காலிக வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நிா்வாக அதிகாரி ஜி.உமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு தமிழ்ச் சங்க உறுப்பினா்களுக்கு சங்கத் தோ்தல் பருவம் 2021 - 2023 ஆண்டுக்கான தாற்காலிக வாக்காளா் பட்டியல் சங்க வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்ச் சங்க அலுவலகத்திலும் வாக்காளா்கள் பட்டியல் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் வாக்காளா் பெயா்கள் உள்ளிட்டவைகளில் திருத்தம் இருப்பின் பிப். 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் எழுத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.