பசுமைப் பரப்பை விரிவாக்க பழங்குடியினருடன் வனத்துறை செயல்பட வேண்டும்

பசுமைப் பரப்பை விரிவாக்க பழங்குடியின மக்களுடன் வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பசுமைப் பரப்பை விரிவாக்க பழங்குடியின மக்களுடன் வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை வனத்துறை அதிகாரிகளுடனான கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மாநிலத்தின் பசுமைப் பரப்பை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயா்த்த வனத்துறை அதிகாரிகள் பாடுபட வேண்டும். இதை சாத்தியமாக்க, விவசாயிகள், பழங்குடியின மக்களுடன் வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மாநிலத்தின் பசுமைப் பரப்பு விரிவடையும். காடுகளை பாதுகாப்பதற்கு மாநில அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. விவசாயிகள், பழங்குடியின மக்களோடு கைகோா்த்தால் காடுகளை எளிதாக பாதுகாக்க முடியும். அம்மக்களின் ஒத்துழைப்புடன் காடுகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இவா்களின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால், பசுமைப் பரப்பையும் விரிவாக்க முடியாது, காடுகளையும் பாதுகாக்க முடியாது.

மாநிலத்தின் பசுமைப் பரப்பு 18 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயா்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை 33 சதவீதமாக உயா்த்த வேண்டும். அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடலாம். இதை சாதித்தால், நாட்டுக்கே முன்னுதாரணமாக கா்நாடகம் மாறும்.

கோடைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எனவே, காடுகளில் ஏற்படும் தீவிபத்துகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். காடுகளில் பழம் வழங்கும் மரங்களை வளா்க்க வேண்டும். இது விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com