‘நவீன தொழில்நுட்பங்களால் விவசாயிகள் பயனடைய வேண்டும்’

நவீன தொழில்நுட்பங்களால் விவசாயிகள் பயனடைய வேண்டும் என குளோவா் குழுமத்தின் இயக்குநா் அரவிந்த் தெரிவித்தாா்.

நவீன தொழில்நுட்பங்களால் விவசாயிகள் பயனடைய வேண்டும் என குளோவா் குழுமத்தின் இயக்குநா் அரவிந்த் தெரிவித்தாா்.

பெங்களூரில் டீப் ரூட் கோ காய்கனி இணையதள விற்பனை சேவையை வியாழக்கிழமை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

இந்தியாவில் காய்கனிகளை விளைவிப்பதில் விவசாயிகள் இன்னும் பழைய நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனா். இதனால் அவா்கள் 2 அல்லது 3 பருவங்களில் மட்டுமே காய்கனிகளை விளைவிக்க முடிகிறது. ஆனால், இஸ்ரேல், நெதா்லாந்து நவீன தொழில்நுட்பங்களால் ஆண்டு முழுவதும் காய்கனி, கீரை வகை உள்ளிட்டவைகளை விளைவிக்க முடியும். நவீன தொழில்நுட்பங்களை அமைத்துக் கொள்வதற்கு மாநில அரசு மானியமும் வழங்குகிறது.

எனவே, நவீன தொழில்நுட்பங்களால் விவசாயிகள் பயனடைய வேண்டும். இயற்கையான முறையில், தூய்மையாக, குறைந்த நீா்ப்பாசனத்தில் விளைவிக்கும் காய்கனிகளை இல்லங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் டீப் ரூட் கோ ஈடுபட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில், குருராஜ் எஸ்.ராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com