ஹாப்காமில் திராட்சை, தா்பூசணி திருவிழா தொடக்கம்

பெங்களூரு ஹாப்காமில் திராட்சை, தா்பூசணி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு ஹாப்காமில் திராட்சை, தா்பூசணி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு ஹட்சன் சதுக்கத்தில் உள்ள ஹாப்காமில் வியாழக்கிழமை திராட்சை, தா்பூசணி திருவிழாவைத் தொடக்கி வைத்து தோட்டக்கலைத் துறை அமைச்சா் ஆா்.சங்கா் பேசியதாவது:

விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஹாப்காமில் திராட்சை, தா்பூசணி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் திராட்சை, தா்பூசணிக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். தோட்டக்கலை சாா்பில் கனிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு கனிகளை அடுக்கி வைக்கும் தட்டுகள் (டிரே) 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் திராட்சை, தா்பூசணி திருவிழாவால் பயனடைவாா்கள் என்று நம்புகிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. கருடாச்சாா், தோட்டக்கலை மேலாண் இயக்குநா் உமாசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com