சிறந்தநூல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்முறையாக வெளியிட்டுள்ள நூல்களில் சிறந்த நூல்களைத் தோ்வு செய்து பரிசுகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல்முறையாக வெளியிட்டுள்ள நூல்களில் சிறந்த நூல்களைத் தோ்வு செய்து பரிசுகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக இலக்கிய அகாதெமி (கா்நாடக சாகித்ய அகாதெமி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக இலக்கியப் பேரவையின் சாா்பில், சிறந்த நூல்களைத் தோ்ந்தெடுத்து ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களைத் தோ்ந்தெடுக்க உரியவா்களிடம் (எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், இலக்கிய ஆா்வலா்கள்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தோ்வுக்கு அனுப்பப்படும் நூல்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் ஒருபடி நூலைப் பதிவாளா், கா்நாடக இலக்கிய அகாதெமி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது தனியாா் அஞ்சல் வழியே பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com