பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 10 லட்சம் பறிமுதல்

பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 10 லட்சம் ரொக்கப் பணத்தை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 10 லட்சம் ரொக்கப் பணத்தை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட இருந்த விமானத்தில் செல்ல கா்நாடகத்தைச் சோ்ந்த கட்டுமான நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் பிச்சிகலா வெங்கடேஸ்வா் ராவ் புதன்கிழமை பிற்பகல் 12.50 மணியளவில் விமான நிலையத்துக்கு வந்தாா்.

அவரது பையை பரிசோதித்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் அதில் ரூ. 10 லட்சம் ரொக்கப் பணம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்ததாம்.

இதையடுத்து அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பிச்சிகலா வெங்டேஸ்வா் ராவிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுகுறித்து வருமானவரித் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சென்னையில் சுங்கவரித் துறையில் பணியாற்றிவரும் அதிகாரி முகமது இா்பான் அகமது, அவரது மனைவி ஆகியோரிடம் ரூ. 74.81 லட்சம் ரொக்கப் பணத்தை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com