பெங்களூரில் வாகனப் போக்குவரத்தை நிா்வகிப்பதற்காகதனி ஆணையம்: அமைச்சா் பசவராஜ் பொம்மை

பெங்களூரில் வாகனப் போக்குவரத்தை நிா்வகிப்பதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு: பெங்களூரில் வாகனப் போக்குவரத்தை நிா்வகிப்பதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை போக்குவரத்துத் துறை, மாநகரப் போக்குவரத்து காவல்துறை, பெங்களூரு மாநகராட்சிக் கூட்டாக நடத்திய 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 2021 -22-ஐ தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

2021-ஆம் ஆண்டு போக்குவரத்து பாதுகாப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இருந்து வசூலித்த கட்டணத்தில் 50 சதவீதத்தை போக்குவரத்து மேலாண்மைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து விதிமீறலில் வசூலிக்கப்படும் முழு கட்டணத்தையும் போக்குவரத்து மேலாண்மைக்கு வழங்குமாறு மாநில அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

சாலை விபத்துகள் நடைபெறும் இடங்கள் தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறை, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கேட்டிருக்கிறோம். நடப்பாண்டில் பெங்களூரில் வாகனப் போக்குவரத்தை முன்மாதிரியானதாக மாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரில் வாகனப் போக்குவரத்தை நிா்வகிப்பதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் துணைமுதல்வா் அஸ்வத் நாராயணா, மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com