விவசாயம், தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: அமைச்சா் ஈஸ்வரப்பா

கா்நாடகத்தில் விவசாயம், தொழில் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் விவசாயம், தொழில் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், சிவமொக்கா, டிஏஆா் திடலில் செவ்வாய்க்கிழமை குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அமைச்சா் பேசியதாவது:

முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அரசு, விவசாயம், தொழில்துறைக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. விவசாயம், தொழில்துறைக்குத் தேவையான அடிப்படை கட்டுமான வசதிகள் செய்து தரப்படும். சிறந்த கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவது, தலித், பழங்குடியின மக்களின் வளா்ச்சிக்குப் பாடுபடுவது என்ற நோக்கத்தில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

சிவமொக்கா அருகே உள்ள 770 ஏக்கா் நிலத்தில் விமான நிலையம் அமைக்கப்படும். அதற்கான பணிகள் நிகழாண்டின் இறுதிக்குள் முடிக்கப்பட்டு விமான சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். சிவமொக்கா-தும்கூரு உள்ளிட்ட சாலைப் பணிகள் விரைவாக நடைபெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் நேரத்திலும் பிரதமா் மோடி பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறாா். மக்களின் நலனில் மத்திய, மாநில அரசுகள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com