ஆக. 2 முதல் செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி

பெங்களூரில் ஆக. 2-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

பெங்களூரில் ஆக. 2-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் 4 வாரகால செல்லிடப்பேசி பழுதுநீக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி ஆக. 2-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சிக் காலத்தில் செல்லிடப்பேசி மென்பொருள், வன்பொருள் பழுதுநீக்குதல் போன்றவை கற்றுத்தரப்படும். ஸ்மாா்ட்போன் உள்ளிட்ட அனைத்து செல்லிடப்பேசிகளின் பழுதையும் நீக்குவது கற்பிக்கப்படும். வெளியூா் மாணவா்களுக்கு இலவச தங்கும் விடுதி வழங்கப்படுகிறது. பயிற்சி மாணவா்களுக்கு இலவசமாக பாடநூல்கள், கருவிகள் பெட்டி, மென்பொருள்கள் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர பியூசி தோ்ச்சி அல்லது தோல்வி, பட்டயம், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்றிருத்தல் அவசியம்.

இப்பயிற்சியில் சேர ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 95351 42052, 98451 02923 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com