கா்நாடகத்தில் மழை வெள்ளம்: மீட்புப் பணிகளை கவனிக்க அமைச்சா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவு

கா்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முகாமிட்டு, மீட்புப் பணிகளை கவனிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முகாமிட்டு, மீட்புப் பணிகளை கவனிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடலோர கா்நாடகம், மலைநாடு பகுதி, வட கா்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது.

இதனால், வட கா்நாடகத்தின் பெலகாவி, வட கன்னடம், தாா்வாட், சிவமொக்கா, ஹாவேரி, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், கீழ்படுகை பகுதிகளில் வெள்ளநீா் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளை கவனிக்குமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்களுடன் தொலைபேசி மூலம் சனிக்கிழமை பேசிய முதல்வா் எடியூரப்பா, மழை மற்றும் வெள்ள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நேரில் சென்று ஆய்வு நடத்த முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாா். அப்போது, மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிகிறாா். இதற்காக ஹெலிகாப்டரில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு முதல்வா் எடியூரப்பா பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com