சித்தலிங்கையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

கன்னட இலக்கியவாதி சித்தலிங்கையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கன்னட இலக்கியவாதி சித்தலிங்கையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கன்னட இலக்கிய உலகில் புகழ் பெற்று விளங்கிய சித்தலிங்கையா(67), கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலமானாா். பெங்களூரு, ஞானபாரதி, பெங்களூரு பல்கலைக்கழகம் வளாகத்தில் அமைந்துள்ள டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் ஆய்வு மையத்தில் சனிக்கிழமை சித்தலிங்கையாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு, அவரது உடலுக்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, திரைப்பட இயக்குநா் நாகதிஹள்ளி சந்திரசேகா், பெங்களூரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் வேணுகோபால், பதிவாளா்கள் கே.ஜோதி, தேவராஜ், ஐஏஎஸ் அதிகாரி குமாா்நாயக், இந்திய குடியரசுக்கட்சி மாநிலத் தலைவா் எம்.வெங்கடசாமி உள்ளிட்ட ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

அதன்பிறகு, கன்னடம் மற்றும் கலாசாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கலாகிராமத்திற்கு சித்தலிங்கையா உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, பௌத்த சமயத்தின்படி அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

அவரது உடலுக்கு துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா ஆகியோா் இறுதி அஞ்சலி செலுத்தினா். பின்னா், அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் அமலில் இருப்பதால், முக்கியமானவா்கள் மட்டும் இறுதிச்சடங்கில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com