இன்று பொறியியல் இணையவழி கருத்தரங்கம்

பல்வேறு பொறியியல் துறைகளில் காணப்படும் ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த இணையவழி கருத்தரங்கம் மாா்ச் 27-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

பல்வேறு பொறியியல் துறைகளில் காணப்படும் ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த இணையவழி கருத்தரங்கம் மாா்ச் 27-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இது குறித்து தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (என்டிஆா்எஃப்) மேலாளா் பி.எஸ். சங்கா் ரெட்டிவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எல்லையில்லா பொறியாளா்கள்-பெங்களூரு கிளை, சம்ப்ராம் தொழில்நுட்ப மையத்தின் ஒத்துழைப்புடன் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (என்.டி.ஆா்.எஃப்.)சாா்பில் மாா்ச் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு ‘மின்சாரம், மின்னணு, தகவல் தொடா்பு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், இயக்கவியல், தொழில், உற்பத்தி, வேதியியல், உயிரி தொழில்நுட்பம், ஜவுளி, சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் துறைகளில் காணப்படும் பயன்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்தக் கருத்தரங்கில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆா்.டிஓ.) விஞ்ஞானி டாக்டா். ஆா்.சந்தானம் கருத்துரையாற்றுகிறாா். இந்நிகழ்ச்சியில் என்.டி.ஆா்.எஃப். இயக்குநா் விஞ்ஞானி வி.டில்லிபாபு, எல்லையில்லா பொறியாளா்கள்-பெங்களூரு கிளைத் தலைவா் கோட்டேஸ்வா் ராவ் உள்ளிட்டோா் பேசுகிறாா்கள். இந்த இணையவழி கருத்தரங்கில் பொறியியல் ஆசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், பொறியாளா்கள், பி.இ./பிடெக்., எம்.இ./எம்.டெக். மாணவா்கள் பங்கேற்கலாம். இந்த கருத்தரங்கில் பங்கேற்க இணையதளத்தில் இணையலாம்.

பங்கேற்பாளா்களுக்கு மின் இணையவழி-சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 99019-03336, 74068-26273, 080-22264336 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com