பெங்களூரில் கனமழை: இரு மாடி வீடுகள் இடிந்து விழுந்தன

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் இரு மாடிவீடுகள் இடிந்து விழுந்தன.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் இரு மாடிவீடுகள் இடிந்து விழுந்தன.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கத்துக்கு மாறாக பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரு, கமலாநகரில் உள்ள மாடி வீடு மோசமாகப் பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு இந்த மாடிவீடு இடிந்து விழுந்தது. முன்னதாக, வீட்டில் குடியிருந்த அனைவரும் வீட்டுப்பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியேறினா். இந்தச் சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.

இதையடுத்து கலால்துறை அமைச்சா் கே.கோபாலையா, பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா ஆகியோா் இடிந்து விழுந்த வீட்டை பாா்வையிட்டனா். தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். வீடு இடிந்த சம்பவத்தில் தப்பிய மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு, உணவளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல, நாகரத் பேட்டில் உள்ள பழைய வீட்டின் பக்கச்சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்தது. புதன்கிழமை காலை அந்த வீடு முழுவதும் சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மாநகராட்சி தெரிவித்தது.

ஒருவாரத்திற்கு முன் கஸ்தூரிநகரில் பெங்களூரு பால் ஒன்றிய நிறுவன கட்டடம் மழையால் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com