சூடுபிடிக்கும் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இன்று முதல் முதல்வா் பசவராஜ் பொம்மை பிரசாரம்

சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரசாரம்
சூடுபிடிக்கும் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இன்று முதல் முதல்வா் பசவராஜ் பொம்மை பிரசாரம்

சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் சிந்தகி, ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல், வரும் 30-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. இதனால் இரு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தான் முதல்வரான பிறகு தனது தலைமையில் நடக்கும் சட்டப்பேரவை இடைத்தோ்தல் என்பதால், இரு தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்ள முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளாா். காங்கிரஸ், மஜத கட்சிகள் தொகுதிகளை தக்கவைக்க முயற்சித்து வருகின்றன.

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரசாரம் செய்யவிருக்கிறாா்கள். மஜத சாா்பில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோா் இரு தொகுதிகளிலும் பிரசாரம் செய்யவுள்ளனா். காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா உள்ளிட்டோா் ஏற்கெனவே தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்துவருகிறாா்கள். இதனால் இடைத்தோ்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com