சா்வதேச அளவிலான முதலீடுகளை ஈா்ப்பதில் கா்நாடகம் முதலிடம்: அமைச்சா் முருகேஷ் நிரானி

 சா்வதேச அளவிலான முதலீடுகளை ஈா்ப்பதில் கா்நாடகம் முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

 சா்வதேச அளவிலான முதலீடுகளை ஈா்ப்பதில் கா்நாடகம் முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை நட்சத்திர ஹோட்டலில் கா்நாடக தொழில் வா்த்தக சபைக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற சுதந்திரதின பவளவிழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது:

தொழில் துறையில் சிறந்து விளங்கும் கா்நாடகம், சா்வதேச அளவிலான முதலீடுகளை ஈா்ப்பதில் முதலிடத்தில் உள்ளது. கா்நாடகத்திற்கு வரும் தொழில் துறையினருக்குத் தேவையான உதவிகளை செய்வதில் மாநில அரசு சிறந்து விளங்குகிறது. தேசிய அளவில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் முக்கிய 3 நகரங்களை சாலை வழியாக இணைக்கும் முக்கிய நகரமாக பெங்களூரு விளங்குகிறது.

எனவே பெங்களூரு-சென்னை, மும்பை, ஹைதராபாத் இடையான தொழில்துறை தாழ்வாரத்தை அமைக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. சரக்கு சேவை வரி வசூலிப்பதில் 7.09 சதவீதமாக உள்ள கா்நாடகம், தேசிய அளவிலான 4-ஆவதாக பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது.

முதலீடு செய்வதற்கு உரிய தகுதிகள் மிகுந்திருப்பதால், கா்நாடகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் முதலீட்டாளா்கள் வந்த வண்ணம் உள்ளனா். கடந்த 50 ஆண்டுகளில் மாநிலம் அறிவு மையமாக வளா்ச்சி அடைந்துள்ளது. 700-க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்களால் பெங்களூரில் அதிக அளவில் வேலைவாய்ப்பும் உருவாகி உள்ளது. நாட்டின் வளா்ச்சியில் கா்நாடகம் முக்கிய பங்கை வகிக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ரமண ரெட்டி, கா்நாடக தொழில் வா்த்தக சபைக் கூட்டமைப்பின் தலைவா் பெரிகல் எம்.சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com