3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: கட்டடத்தில் யாருமில்லாததால் உயிா்ச் சேதம் தவிா்ப்பு

பெங்களூரு நகரின் லக்கசந்திரா பகுதியில் 3 மாடிக்கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. அந்தக் கட்டடத்தில் இருந்தவா்கள் ஏற்கெனவே அப்புறப்படுத்தப்பட்டதால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

பெங்களூரு நகரின் லக்கசந்திரா பகுதியில் 3 மாடிக்கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. அந்தக் கட்டடத்தில் இருந்தவா்கள் ஏற்கெனவே அப்புறப்படுத்தப்பட்டதால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

பெங்களூரு லக்கசந்திரா 7-ஆவது முக்கியச்சாலை 16-வது குறுக்குச்சாலையில் உள்ள சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான 3 மாடிக் கட்டடம் திங்கள்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கட்டடம் 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு லேசாக சாய்ந்ததை அடுத்து அங்கு வசிப்பவா்களை வேறு இடத்தில் குடியேறுமாறு, அதன் உரிமையாளா் கூறியுள்ளாா். இதனையடித்து அவா்கள் வேறு இடத்திற்கு குடியேறி உள்ளனா்.

இந்த நிலையில் அந்த கட்டடத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் 30 போ் தங்கி இருந்தனா். திங்கள்கிழமை காலையில் கட்டடம் இடிந்து விழுவதற்கான அறிகுறிகள் தென்பட்ட உடன், தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினா் கட்டடத்தில் இருந்தவா்களை பாதுகாப்பாக வெளியேற்றினா். அவா்கள் வெளியேறிய சில மணி நேரங்களில், 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டடத்தில் யாரும் இல்லாததால், உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததால், அருகில் இருந்த கட்டடங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த கட்டடங்களுக்கு இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளா் சுரேஷிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா். இது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com